Grade 4

Click below to register for the course: https://northcummingtamilschool.org/register/

(0.0/ 0 )
Last Updated : July 5, 2024

வகுப்பு 4
குறிக்கோள்‌:

பேசுதல்‌:

பாகமேற்று நடித்தல்‌, தேவைக்கேற்பக்‌ குரல்‌ ஏற்ற இறக்கத்துடன்‌ பேசுதல்‌, சூழலுக்கேற்ப பேச்சுத்‌ தமிழில்‌ பேசுதல்‌ அல்லது எழுத்துத்தமிழில்‌ பேசுதல்‌, படம்‌ பார்த்து வெவ்வேறு கழலை அறிந்துக்கொண்டு. குறிப்புச்‌ சொற்களின்‌ உதவியுடன்‌ பேச்சுத்‌ தமிழில்‌ பேசுதல்‌, விளையாட்டுகள்‌ மூலம்‌ எளிமையாகப்‌ புரிந்துக்‌ கொண்டு பேசுதல்‌, திட்டப்பணிகள்‌ செய்வதன்‌ மூலம்‌ வித விதமான தலைப்புகளை ஆராய்ந்துப்‌ பேசுதல்‌.

எழுதுதல்‌:

படித்த எழுத்துகளையும்‌, சொற்களையும்‌ கொண்டூ 4 முதல்‌ 5 சொற்கள்‌ கொண்ட எளிய வாக்கியங்களை உருவாக்குதல்‌. தெளிவாகவும்‌ வரிவடிவம்‌ சிதையாமலும்‌ எழுதுதல்‌. ஆசிரியர்‌ சொல்வதைப்‌ புரிந்து, கேட்டுச்‌ சரியான சொல்லை எழுதுதல்‌. சொற்களை வரிசைப்படுத்தி வாக்கியம்‌ அமைத்தல்‌.

படித்‌தல்‌:

சொற்களை சரியான உச்சரிப்புடன்‌ பொருள்‌ அறிந்து வாசித்தல்‌. சிறு வாக்கியங்களைப்‌ பொருள்‌ அறிந்து ஏற்ற இறக்கத்துடன்‌ வாசித்தல்‌. குறைந்த வாக்கியங்கள்‌ கொண்ட பாடல்கள்‌, கதைகள்‌ வாசித்தல்‌. திருக்குறள்‌ பொருள்‌ அறிந்து வாசித்தல்‌, பத்தியை வாசித்துக்‌ கருத்தறிதல்‌

இலக்கணம்‌:

ர, றன,ண,ல, ௭, ழ வேறுபாடுகள்‌, தன்மை, முன்னிலை, படர்க்கை, ஒருமை, பன்மை, காலங்கள்‌, குறில்‌ நெடில்‌, எதிர்ச்சொற்கள்‌, வாக்கியங்களைபத்திகளை நிறைவு செய்‌, சொற்களை வரிசைப்படுத்தி வாக்கியம்‌ அமைத்தல்‌, கேட்டு/படித்து கருத்தறிதல்‌, சொல்வளம்‌, ஆண்பால்‌ பெண்பால்‌, வேற்றுமை உருபுகள்‌.

prek1
prek2
grade5