Grade 7

Click below to register for the course: https://northcummingtamilschool.org/register/

(0.0/ 0 )
Last Updated : July 5, 2024

வகுப்பு 7
குறிக்கோள்‌:

பேசுதல்‌:

விவாதம்‌ செய்தல்‌, கருத்துரைத்தல்‌, கதை கூறுதல்‌, பாகமேற்று நடித்தல்‌, பல்வேறு சூழல்களில்‌ கருத்துக்களை எளிய முறையிலும்‌ பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலும்‌ கூறுதல்‌. தேவைக்கேற்பக்‌ குரல்‌ ஏற்ற இறக்கத்துடன்‌ பேசுதல்‌, சூழலுக்கேற்ப பேச்சுத்‌ தமிழில்‌ பேசுதல்‌ அல்லது எழுத்துத்தமிழில்‌ பேசுதல்‌. கேட்ப்போரின்‌ கேள்வியைப்‌ புரிந்து
கொண்டு அதற்கு ஏற்ற பதிலை வாக்கியத்தில்‌ கூறுதல்‌. பொருத்தமான சொற்களையும்‌ பலதரப்பட்ட வாக்கியங்களையும்‌ பயன்படுத்தித்‌ தெளிவாகக்‌ கருத்துப்‌ பரிமாற்றம்‌ செய்தல்‌. கருத்துப்‌ பரிமாற்றத்தைத்‌ தொடங்கவும்‌, தொடர்ந்து நிகழ்த்தவும்‌, சரியான முறையில்‌ முடிக்கவும்‌ அறிந்திருத்தல்‌. இடம்‌, பொருள்‌, சூழலுக்கேற்பத்‌ தெளிவாகக்‌ கருத்துப்‌ பரிமாற்றம்‌ நிகழ்த்த அறிந்திருத்தல்‌.

எழுதுதல்‌:

சூழல்‌, தொடர்படங்கள்‌, உதவிச்‌ சொற்கள்‌, சிறு குறிப்புகள்‌ முதலியவற்றைப்‌ பயன்படுத்தித்‌ தம்‌ கருத்துகளின்‌ மூலம்‌ கதை அல்லது கட்டூரை எழுதுதல்‌. தெளிவாகவும்‌ வரிவடிவம்‌ சிதையாமலும்‌ எழுதுதல்‌. படித்த சொற்களையும்‌, தொடர்களையும்‌ நினைவுகூர்ந்து எழுதுதல்‌; படித்த எழுத்துகளையும்‌, சொற்களையும்‌ கொண்டு வாக்கியங்களை உருவாக்குதல்‌. மொழிபெயர்ப்பு, வாக்கியங்களை ஆங்கிலத்தில்‌ மொழி பெயர்த்தல்‌.

படித்‌தல்‌:

சொற்களை சரியான உச்சரிப்புடன்‌ பொருள்‌ அறிந்து சரளமாக வாசித்தல்‌. வாக்கியங்களைப்‌ பொருள்‌ அறிந்து ஏற்ற இறக்கத்துடன்‌ வாசித்தல்‌. குறைந்த வாக்கியங்கள்‌ கொண்ட பாடல்கள்‌, கதைகள்‌ வாசித்தல்‌. திருக்குறள்‌ பொருள்‌ அறிந்து வாசித்தல்‌. பத்தியை வாசித்துக்‌ கருத்தறிதல்‌. பாடத்தை வாசித்துப்‌ பொருள்‌ உணர்ந்து
விவரித்தல்‌. கதைப்‌ புத்தகங்களை ஆழ்ந்து படித்தல்‌.

இலக்கணம்‌:

வேற்றுமை உருபு, ஆண்பால்‌, பெண்பால்‌, குறில்‌, நெடில்‌, பெயர்ச்சொல்‌, பெயரெச்சம்‌, பெயரடை, வினைச்சொல்‌, வினையெச்சம்‌, வினையடை, வினைமுற்று, ஆண்பால்‌, பெண்பால்‌, காலங்கள்‌, ஒருமை, பன்மை.

prek1
grade6
grade2