Grade 8

Click below to register for the course: https://northcummingtamilschool.org/register/

(0.0/ 0 )
Last Updated : July 5, 2024

வகுப்பு 8
குறிக்கோள்‌:

பேசுதல்‌:

விவாதம்‌ செய்தல்‌, கருத்துரைத்தல்‌, கதை கூறுதல்‌, பாகமேற்று நடித்தல்‌. பல்வேறு சூழல்களில்‌ கருத்துகளை எளிய முறையிலும்‌ பயன்பாட்டுக்க ஏற்ற வகையிலும்‌ கூறுதல்‌. தேவைக்கேற்பக்‌ குரல்‌ ஏற்ற இறக்கத்துடன்‌ பேசுதல்‌, சூழலுக்கேற்ப பேச்சுத்‌ தமிழ்‌ அல்லது எழுத்துத்தமிழில்‌ பேசுதல்‌. கேட்போரின்‌ கேள்வியைப்‌ புரிந்து கொண்டூ அதற்கு ஏற்ற பதிலை வாக்கியத்தில்‌ கூறுதல்‌. பொருத்தமான சொற்களையும்‌ பலதரப்பட்ட வாக்கியங்களையும்‌ பயன்படுத்தித்‌ தெளிவாகக்‌ கருத்துப்‌ பரிமாற்றம்‌ செய்தல்‌. கருத்துப்‌ பரிமாற்றத்தைத்‌ தொடங்கவும்‌, தொடர்ந்து நிகழ்த்தவும்‌, சரியான முறையில்‌ முடிக்கவும்‌ அறிந்திருத்தல்‌. இடம்‌, பொருள்‌, சூழலுக்கேற்பத்‌ தெளிவாகக்‌ கருத்துப்‌ பரிமாற்றம்‌ நிகழ்த்த அறிந்திருத்தல்‌. கருத்துகளை மேலும்‌ விளக்க அறிந்திருத்தல்‌. திருக்குறள்‌ பொருள்‌ விளக்கிக்‌ கூறுதல்‌.

எழுதுதல்‌:

சூழல்‌, தொடர்படங்கள்‌, உதவிச்‌ சொற்கள்‌, சிறு குறிப்புகள்‌ முதலியவற்றைப்‌ பயன்படுத்தித்‌ தம்‌ கருத்துகளை குறைந்தது பத்து வாக்கியங்களை நிரல்பட எழுதுதல்‌. தெளிவாகவும்‌ வரிவடிவம்‌ சிதையாமலும்‌ எழுதுதல்‌. படித்த சொற்களையும்‌, தொடர்களையும்‌ நினைவுகூர்ந்து எழுதுதல்‌; படித்த சொற்களைக்‌ கொண்டு எளிய
வாக்கியங்களை உருவாக்குதல்‌. படம்‌, படத்தொடர்‌, கழல்‌ முதலியவற்றையொட்டிக்‌ கதை அல்லது கட்டுரை எழுதுதல்‌.மொழிபெயர்த்தல்‌. உயர்நிலை சொல்வளம்‌.

படித்‌தல்‌:

சிறிய நூல்களை பொருள்‌ உணர்ந்து சரளமாக வாசித்தல்‌. பலவிதமான நூல்களை ஆழ்ந்து படித்தல்‌. படங்கள்‌, வரைபடங்கள்‌, அட்டவணைகள்‌, போன்ற பலதரப்பட்ட நூல்களை படித்து அவற்றில்‌ உள்ள நேரடிப்‌ பொருளை புரிந்து கொண்டூ ஒருங்கிணைத்தல்‌.

இலக்கணம்‌:

வேற்றுமை உருபுகள்‌ இணைத்து எழுதுதல்‌, பெயரெச்சம்‌, பெயரடை, பெயர்‌ உரிச்சொல்‌ பயன்பாடு, வினையெச்சம்‌, வினையடை, வினை உரிச்சொல்‌ பயன்பாடு, ஒலி வேறுபாடூ அறிதல்‌.

kg
AG1
grade3
Loading